000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a வைஷ்ணவி |
300 | : | _ _ |a சாக்தம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a அன்னையர் எழுவர் தொகுதியில் நான்காவதாக அமர்ந்துள்ள விஷ்ணுவின் நாயகி வைஷ்ணவி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a புராணங்கள் வைஷ்ணவியை விஷ்ணுவின் பெண் சக்தி என்கின்றன. விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து, கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பாள். இவர் இராஜவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பார் என்று பூர்வகாரணாகமம் குறிப்பிடுகிறது. இவரைப் பற்றி விஷ்ணு தர்மோத்திரம், தேவி புராணம் ஆகியவற்றிலும் கூறப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் வைஷ்ணவி பூரிமத்துடன் கூடிய கிரீட மகுடம் தரித்தவராயும், பின்னிரு கைகளில் எறிநிலை சக்கரத்தையும், சங்கும் கொண்டு காணப்படுகிறார். நெற்றியில் முகப்புடன் கூடிய நெற்றிப்பட்டை விளங்குகிறது. முன் வலது கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும், வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி பீடத்தின் மீது வைத்தவாறும் நல்லிருக்கையில் (சுகாசனம்) அமர்ந்துள்ளார். நீள்செவிகளில் மகர குண்டலங்களும், மார்பில் சன்ன வீரமும், கழுத்தில் கண்டிகையும், சரப்பளியும், தோள்களில் தோள் மாலையும், கைகளில் தோள்வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிந்துள்ளார். மார்பில் குஜபந்தம் என்னும் மார்புக் கச்சை அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட நூலாடை முழங்காலுக்கு கீழ் வரை காட்டப்பட்டுள்ளது. கால்களில் சிலம்பும், சதங்கையும் அணி செய்கின்றன. இடைக்கட்டின் கடி பந்தம் முன் வளைந்து பீடத்தின் மீது விழுந்துள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் தொடையில் காட்டப்பட்டுள்ளது. தேவியின் வலதுபுறம் நிற்கும் தூணின் மீது வாகனமான கருடன் வணங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளார். |
653 | : | _ _ |a வைஷ்ணவி, அன்னையர் எழுவர், சப்த மாதர், ஏழு கன்னியர், சப்தமாதர் தொகுதி, சப்த மாதர்கள், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை, சிவன் குடைவரை, புடைப்புச் சிற்பம், முற்காலப் பாண்டியர் சிற்பங்கள், பாண்டியர் கலைப்பாணி, பாண்டிய மண்டலம், பாண்டியர் குடைவரைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மலையடிப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மலையடிப்பட்டி |d புதுக்கோட்டை |f கீரனூர் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 10.65417098 |
915 | : | _ _ |a 78.89684021 |
995 | : | _ _ |a TVA_SCL_000482 |
barcode | : | TVA_SCL_000482 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |